தமிழ்ப்புத்தாண்டுக்கு டபுள் விருந்து. விஜய் ரசிகர்கள் குஷி

தமிழ்ப்புத்தாண்டுக்கு டபுள் விருந்து. விஜய் ரசிகர்கள் குஷி

இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய சூப்பர் ஹிட் திரைப்படமான ‘தெறி’ வெளியாகி வரும் தமிழ்ப்புத்தாண்டு தினத்தோடு ஒரு வருடம் பூர்த்தி ஆகின்றது. இந்த கொண்டாட்டத்தை கொண்டாடும் வகையில் சென்னை கோயம்பேடு ரோஹினி திரையரங்கில் ‘தெறி’ சிறப்பு காட்சி திரையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னை தவிர பிறா நகரங்களிலும் இந்த படத்தை திரையிட முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் சன் டிவியில் விஜய் நடிப்பில் கடந்த பொங்கல் தினத்தில் வெளியான ‘பைரவா’ திரைப்படம் ஒளிபரப்பாகின்றது. எனவே தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் விஜய் நடித்த ‘தெறி’ மற்றும் ‘பைரவா’ படம் இரண்டையும் பார்க்க வாய்ப்புள்ளதால் விஜய் ரசிகர்களுக்கு டபுள் விருந்தாக கிடைத்துள்ளது. இதனால் ரசிகர்கள் குஷியாக உள்ளனர்.

மேலும் விஜய் தற்போது நடித்து வரும் ‘தளபதி 61’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மிக விரைவில் ராஜஸ்தானில் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply