shadow

/யுவன்ஷங்கர் ராஜாவுக்கு கிடைத்த டபுள் போனஸ்
yuvan shankar raja
சிம்பு, மஞ்சிமா மோகன் நடிப்பில் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் படப்பிடிப்பை கிட்டத்தட்ட முடித்துவிட்ட இயக்குனர் கவுதம் மேனன் தற்போது தனுஷ் நடிக்கும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ என்ற படத்தை தயாரித்து இயக்கி வருகிறார். மேலும் செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்து வரும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற படத்தையும் தயாரித்து வருகின்றார்.

இந்நிலையில் இந்த இரண்டு படங்களுக்கும் இசையமைக்க யுவன்ஷங்கர் ராஜாவை கவுதம் மேனன் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனால் யுவன்ஷங்கர் ராஜாவுக்கு டபுள் போனஸ் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

செல்வராகவனின் படங்களில் ஏற்கனவே யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்திருந்த போதிலும் கவுதம் மேனனுடன் முதல்முறையாக யுவன் பணியாற்றுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்  எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது துருக்கியில் நடைபெற்று வருகிறது.

Chennai Today News: Double bonus to Yuvanshankar raja

Leave a Reply