பால், காய்கறி, மருந்துகள் வீட்டிலேயே டெலிவரி: யாரும் வெளியேற வேண்டாம் என முதல்வர் அறிவிப்பு

பால், காய்கறி, மருந்துகள் வீட்டிலேயே டெலிவரி: யாரும் வெளியேற வேண்டாம் என முதல்வர் அறிவிப்பு

காய்கறிகள் பால் பழங்கள் மருந்து பொருட்கள் ஆகியவற்றை வீட்டிலேயே டெலிவரி செய்கிறோம் என்றும் எனவே அத்தியாவசிய பொருட்களை வாங்கி வருகிறோம் என்ற பெயரில் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்

நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தாலும் அத்தியாவசிய தேவைகளான பால் காய்கறி மருந்து பொருட்கள் ஆகியவற்றை வாங்க மட்டும் மக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

ஆனால் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்கள் மக்கள் தங்கள் தேவைகள் என்னவென்று தொலைபேசிகள் மூலம் ஆர்டர் செய்தால் போதும் என்றும், உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அமைப்பு உடனடியாக அந்த பொருட்களை வீட்டிற்கு வந்து டெலிவரி செய்யும் என்றும் எனவே அத்தியாவசிய பொருள்களை வாங்குவதற்கு கூட வீட்டை விட்டு யாரும் வெளியே வரக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்

வீடுகளுக்கு சென்று பொருட்களை டெலிவரி செய்ய அனைத்து ஏற்பாடுகளும் உத்தரப் பிரதேச மாநில அரசு செய்திருப்பதாகவும் உடனுக்குடன் டெலிவரி செய்ய அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. முதல்வரின் இந்த அறிவிப்பு அம்மாநில மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது இதேபோன்று மற்ற மாநில முதல்வர்களும் தங்கள் மாநிலங்களில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது

Leave a Reply