இந்தியாவிலேயே படியுங்கள், சின்னஞ்சிறு நாடுகளுக்கு செல்ல வேண்டாம்: மாணவர்களுக்கு பிரதமர் அறிவுரை

மருத்துவம் உள்ளிட்ட படிப்புகள் படிக்க மாணவர்கள் இந்தியாவிலேயே படிப்பதற்கு ஏராளமான வசதிகள் இருக்கிறது என்றும் எனவே மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும் பிரதமர் மோடிஅறிவுறுத்தியுள்ளார்.

இந்திய மாணவர்கள் மருத்துவம் படிக்க சின்னஞ்சிறு நாடுகளுக்குச் செல்லாமல் இந்தியாவில் படிக்க வேண்டும் என்று கூறிய பிரதமர், வெளிநாட்டில் மருத்துவம் படிக்க செல்வதால் பல்லாயிரம் கோடி ரூபாய் நம் நாட்டை விட்டு செல்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் போர் மூண்டு, மருத்துவம் படிக்கச் சென்ற இந்தியர்கள் பலர் சிக்கித்தவிக்கும் சூழலில் பிரதமர் மோடி இவ்வாறு கூறியுள்ளார்