shadow

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இறந்துவிட்டாரா? இணையத்தில் பரவும் வதந்திக்கு முற்றுப்புள்ளி

rajinikanthசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவுக்கு குடும்பத்துடன் ஓய்வு எடுக்க சென்ற நிலையில் ஒருசில வக்கிரமான இணையதளங்கள் அவர் அமெரிக்க மருத்துவமனையில் மாரடைப்பால் இறந்துவிட்டதாகவும் இந்த செய்தியை அவரது மகள் செளந்தர்யா உறுதி செய்ததாகவும் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆனால் உண்மையில் ரஜினிகாந்த் நலமாக இருப்பதாகவும் அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் ரஜினியின் குடும்பத்தினர்களும் அவருக்கு நெருக்கமானவர்களும் ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சிக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

மேலும் இன்னும் சில நிமிடங்களில் ரஜினி தனது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து விளக்கம் அளித்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைப்பார் என்றும் கூறப்படுகிறது. ரஜினி நடித்து முடித்துள்ள ‘கபாலி’ படம் வரும் ஜூலையில் ரிலீஸ் ஆகவுள்ளது. அதேபோல் அவர் நடித்து வரும் மற்றொரு படமான ‘2.0’ படத்தின் படப்பிடிப்பு 50% முடிந்துவிட்டது. இந்த படம் வரும் 2017-ல் ரிலீஸ் ஆகும்.

Leave a Reply