shadow

போப்பாண்டவரை சந்திக்கின்றார் டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் பதவியேற்று அவ்வப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் டொனால்ட் டிரம்ப், வடகொரியா மீதான போரை இன்னும் ஒருசில நாட்களில் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் டிரம்ப் இம்மாதம் 24-ந்தேதி போப்பாண்டவரை சந்திக்க இருப்பதாக வாடிகன் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் டொனால்டு டிரம்ப், தனது சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு அமெரிக்கா திரும்பும் போது ரோம் நகரில் போப்பாண்டவரை சந்திக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பு அப்போஸ்தலிக் அரண்மனையில் காலை 8.30 மணிக்கு துவங்கும் என்றும், வழக்கமாக போப் பிரான்சிஸ் மற்றவர்களை சந்திப்பதை விட சற்று முன்னரே டிரம்ப்-ஐ சந்திக்க ஒப்புக்கொண்டதாகவும் வாடிகன் அறிவித்துள்ளது.

1984 ஆம் ஆண்டு முதல் வாஷிங்டன் மற்றும் வாடிகன் இடையே நல்லுறவு இருந்து வருகிறது. அமெரிக்காவில் மொத்தம் 21 சதவிகிதம் பேர் கத்தோலிக் பிரிவை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply