shadow

வடகொரியாவில் இருந்து விடுதலையான அமெரிக்க இளைஞர் ஒரே வாரத்தில் மரணம்

அமெரிக்காவின் வர்ஜீனியா பல்கலைக்கழக மாணவர் 22 வயது ஓட்டோ வாம்பையர் என்பவர்கடந்த ஆண்டு வட கொரியாவுக்கு சுற்றுலா சென்றிருந்தபோது, அந்த நாட்டு உணவகம் ஒன்றிலிருந்து அரசின் பிரசார சுவரொட்டியைத் திருட முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்றார்.

இந்த நிலையில் அவர் வடகொரிய சிறையில் சித்திரவதை செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இதனால் அவர் திடீரென கோமா நிலைக்கு சென்றதாகவும் அதன் காரணமாக அவர் விடுதலை செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.

வடகொரியாவில் இருந்து விடுதலையாகி அமெரிக்கா சென்ற ஒரே வாரத்தில் ஓட்டோ வாம்பையர் மரணம் அடைந்தார். இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வடகொரியாவுக்கு கடும் கண்டங்களை தெரிவித்துள்ளார். வடகொரியாவில் மிருகத்தனமான ஆட்சி நடைபெறுவதாக அவர் ஆவேச அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply