shadow

தேர்தலில் தோல்வி முகம். ஒப்புக்கொண்ட அதிபர் வேட்பாளர் டொனால்ட்

donaldஅமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பதவிக்காலம் விரைவில் முடிவடைவதை அடுத்து புதிய அதிபரை தேர்வு செய்ய வரும் நவம்பர் 18ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

தொடர்ச்சியான சர்ச்சை பேச்சுகளாலும், அதிரடி நடவடிக்கைகளாலும் டொனால்ட் டிரம்ப் வெற்றி வாய்ப்பு குறைந்து வருவதாகவும், நாளுக்கு நாள் ஹிலாரியின் வெற்றி உறுதி செய்யப்பட்டு வருவதாகவும் அமெரிக்க ஊடகங்களின் கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் தனக்கு வெற்றி வாய்ப்பு குறைவுதான் என்பதை முதல்முறையாக டொனால்ட் ஒப்புக்கொண்டார். இருப்பினும் தனது கொள்கையில் இருந்து அவர் பின்வாங்கப்போவதில்லை என்றும் ஒருவேளை நான் தோல்வி அடைந்தால் மீண்டும் தனிப்பட்ட வாழ்க்கைக்கே திரும்பி விட திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதிபர் ஒபாமா மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளின்டன் இருவரும் இணைந்தே ஐஎஸ் தீவிரவாத அமைப்பை நிறுவியதாக அவர் பேசிய பேச்சே அவருடைய தோல்விக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

Leave a Reply