shadow

18 ஆண்டுகள் வரி செலுத்தவில்லையா டொனால்ட் டிரம்ப்?

donaldஅமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 8ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப்பும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் டொனால்ட் டிரம்ப் கடந்த 18 ஆண்டுகள் வரி செலுத்தாமல் தவிர்த்திருக்க வாய்ப்பு இருப்பதாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே சமீபத்தில் நடைபெற்ற நேரடி விவாதத்தின்போத ட்ரம்பின் வருமான வரி கணக்கு விவரங்கள் குறித்த ஹிலாரியின் கேள்விக்கு மழுப்பலாக டிரம்ப் பதிலளித்ததார். இந்நிலையில் கடந்த 1995-ம் ஆண்டில் ட்ரம்ப் தாக்கல் செய்த வருமான கணக்கின்போது ரூ.6,097 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருந்ததாகவும் இந்த  இழப்பு காரணமாக அவர் அமெரிக்க சட்ட விதிகளின்படி 18 ஆண்டுகள் அவர் வரி செலுத்தாமல் தவிர்த்திருக்கக்கூடும் என்றும் அந்த நாளிதழ் செய்தி வெளீயிட்டுள்ளது.

நேற்று முதல் இந்த வரி ஏய்ப்பு செய்தி அமெரிக்கா முழுவதும் பரபரப்பாக பரவி வருவதால் டிரம்ப்புக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

Leave a Reply