shadow

சிவகார்த்திகேயன் நடித்த ‘டான்’ திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி காதலர் தினத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் அஜித்தின் ’வலிமை’ வெளியாக உள்ளது. அதனை அடுத்து இரண்டு வார இடைவெளியில் விஷாலின் ’வீரமே வாகை சூடும்’ என்ற திரைப்படம் ஜனவரி 26ஆம் தேதி வெளியாக உள்ளது

அதனை அடுத்து இரண்டு வாரங்கள் கழித்து அதாவது பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தில் சிவகார்த்திகேயனின் ‘டான்’ திரைப்படம் வெளியாக உள்ளது.

சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ள இந்த படத்தில் ஷிவாங்கி, சமுத்திரக்கனி, எஸ் ஜே சூர்யா, பாலசரவணன், சூரி உள்பட பலர் நடித்துள்ளனர்.