‘டான்’ படத்தில் விஜய் நடிக்கவிருந்தாரா?

சிவகார்த்திகேயன் நடித்த ‘டான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தில் விஜய் நடிக்கவிருந்ததாக கூறப்படுகிறது.

தளபதி விஜய் நடித்த ‘மெர்சல்’ படத்தை அட்லி இயக்கியபோது அவரிடம் உதவி இயக்குனராக இருந்தவர் தான் டான் இயக்குனர் சிபிசக்கரவர்த்தி

இந்த படத்தின் கதையை ’மெர்சல்’ படத்தின் படப்பிடிப்பின்போதே விஜய்யிடம் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி கூறியதாகவும் இந்த கதை மிகவும் சூப்பராக இருப்பதால் தானே நடிப்பதாக விஜய் கூறியதாகவும் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ஆனால் சில காரணங்களால் விஜய் நடிக்க முடியவில்லை என்பதால் தற்போது விஜய்க்கு பதில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.