shadow

மாநிலங்களவை தேர்தலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பா.ஜனதா சார்பில் போட்டியிடுவதாக வேட்புமனுவை நேற்று தாக்கல் செய்தார்.

அதனுடன் தனது சொத்து விவரங்களையும் தாக்கல் செய்துள்ளார். அதில் வருமான வரி தாக்கல் செய்த விவரங்களை குறிப்பிட்டுள்ளார்.

அவரிடம் மொத்தம் ரூ.63 லட்சத்து 39 ஆயிரத்து 196 அளவுக்கு அசையும் சொத்துகள் உள்ளன.மேலும் ரூ.1 கோடியே 87 லட்சத்து 60 ஆயிரத்து 200 அசையா சொத்துகள் உள்ளன.

ரூ.30 லட்சத்து 44 ஆயிரத்து 838 அளவுக்கு கடன் உள்ளது.

நிர்மலா சீதாராமனுக்கு அசையும், அசையா சொத்துகள், டெபாசிட் ஆகியவற்றின் மொத்த மதிப்பு ரூ.2 கோடியே 79 லட்சத்து 35 ஆயிரத்து 75 என குறிப்பிட்டுள்ளார்.