சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ திரைப்படம் வரும் அக்டோபர் 9ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்தநிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் தீம் மியூசிக் வெளியாகி உள்ளது

இசையமைப்பாளர் அனிருத் டாக்டர் படத்திற்காக கம்போஸ் செய்த தீம் மியூசிக் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது

சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகனா, யோகி பாபு, வினய், அர்ச்சனா, தீபா உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார்.

கேஜேஆர் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிய இந்த படம் வரும் 9ஆம் தேதி வெளியாக உள்ளது.