விஜய்யை முந்திக்கொண்ட சிவகார்த்திகேயன்: அதிர்ச்சியில் லோகேஷ் கனகராஜ்

தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 64’ திரைப்படத்தின் டைட்டில் வரும் ஜனவரி 1-ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் நீட்தேர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்ட அனிதா குறித்த காட்சிகள் இருப்பதால் இந்த படத்திற்கு ’டாக்டர்’ என பெயர் வைக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியானது

இந்த நிலையில் சற்று முன் சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்துக்கு ’டாக்டர்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ‘கோலமாவு கோகிலா’ நெல்சன் இயக்குவதாகவும் அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் சிவகார்த்திகேயன் மற்றும் கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்க இருப்பதாகவும் சற்றுமுன் வீடியோ ஒன்றின் மூலம் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார்

‘தளபதி 64’ படத்திற்கு ’டாக்டர்’ என்ற டைட்டில் வைக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முடிவு செய்திருந்த நிலையில் சிவகார்த்திகேயன் அந்த டைட்டிலை முந்திக்கொண்டு வைத்துள்ளது தெரியவந்ததும் லோகேஷ் கனகராஜ் தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது

Leave a Reply