அதிசயம் ஆனால் உண்மை: விஜய்யை முந்திய சிவகார்த்திகேயன்!

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர் என்றால் அது அஜித் மற்றும் விஜய் என்பது அனைவரும் அறிந்ததே

இந்த நிலையில் திடீர் திருப்பமாக விஜய்யை சிவகார்த்திகேயன் முந்தி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தின் அமெரிக்க வசூலை சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் முறியடித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

அமெரிக்கா பாக்ஸ் ஆபிஸில் இதுவரை 4 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் அதிகமான அமெரிக்க டாலர் வசூலை டாக்டர் குவித்து உள்ளதாகவும் இது மாஸ்டர் வசூலை விட அதிகம் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறியுள்ளன