நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: முழு வெற்றியை பெற்றது

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கிட்டத்தட்ட முழு வெற்றியை பெற்றுள்ள நிலையில் அக்கட்சியின் தொண்டர்கள் இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மொத்தமுள்ள 489 பேரூராட்சிகளில் 434 பேரூராட்சிகள் திமுக வெற்றி பெற்றுள்ளது.

நகராட்சியில் மொத்தமுள்ள 138 நகராட்சிகளில் 132 நகராட்சிகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது.

மாநகராட்சியை பொறுத்தவரை சென்னை உள்பட அனைத்து 21 மாநகராட்சிகளிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது.

அதிமுக 3 நகராட்சிகளையும் 20 பேரூராட்சிகளையும் மற்றவை 3 நகராட்சிகளையும் 35 பேரூராட்சிகளில் பெற்றுள்ளது.