உடைகிறதா திமுக?

சமீபத்தில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அவர்களை திமுகவின் முக்கிய பிரமுகரான விபி துரைசாமி சந்தித்துப் பேசினார்

அரசியல் நாகரீகம் கருதி நடந்த இந்த சந்திப்பு திமுக தலைமைக்கு அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியதாக தெரிகிறது

இதனையடுத்து நேற்று திடீரென விபி துரைசாமி தனது பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார் என திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிவித்தது திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

திமுகவில் மிகவும் செல்வாக்குள்ள விபி துரைசாமியின் பதவி பறிக்கப்பட்டுள்ளதால் பல திமுக பிரமுகர்கள் அதிருப்தி அடைந்திருப்பதாகவும், இதனால் திமுக இரண்டாக பிளவுபட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் திமுக வட்டாராங்களில் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

2021ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கிவரும் நிலையில் திடீரென கட்சியில் இப்படி ஒரு பிளவு ஏற்பட்டால் அது திமுகவுக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என்று கருதப்படுகிறது

Leave a Reply