9திமுகவில் இருந்து சமீபத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி நீண்ட இடைவெளிக்கு பின்னர் தனது மெளனத்தை கலைத்துள்ளார். நேற்று திமுகவின் வேட்பாளர் பட்டியலை கருணாநிதி வெளியிட்டதும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அழகிரி, திமுக இந்ததேர்தலில் படுதோல்வியை அடைவதோடு மூன்றாவது இடத்துக்கு தள்ளப்படும் அபாயம் இருப்பதாக தெரிவித்தார்.

வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோனோர் மு.க.ஸ்டாலிடம் பணம் கொடுத்து வாய்ப்பு பெற்றுள்ளனர்.வேட்பாளர்களைத் தெரிவு செய்ய முறையான நடைமுறை எதுவும் பின்பற்றப்படவில்லை. பணம் கொடுத்தவர்களுக்கே தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதிமுகவில் இருந்து வந்த பலருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டதில் இருந்தே இந்த உண்மை தெரிய வருகிறது.

மேலும் புதிய கட்சி ஆரம்பிக்கும் எண்ணம் எதுவும் தற்போது இல்லை என்றும், தேர்தல் முடிந்த பிறகு ஆதரவாளர்களுடன் கலந்து பேசி உரிய நேரத்தில் உரிய முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். அழகிரி ஆதரவாளர்களான ரித்தீஷ், நெப்போலியன் ஆகியோர்களுக்கு தேர்தல் நிற்க வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது வாய்ப்பு அளிக்கப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை இதனால் எங்களுக்கு ஏமாற்றமும் இல்லை என்று கூறினார்.

Leave a Reply