இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாகை மாவட்ட திமுக மீனவரணி சார்பில் நாகை தலைமை தபால் நிலையம் முன்பு வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 210 பேரையும், 70 விசைப் படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்திய, இலங்கை மீனவர்களை அழைத்துப் பேசி 2 நாட்டு மீனவர்களும் சுமூகமாக மீன்பிடிக்க வழிவகை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதம் நடைபெற்றது.

இதற்கு நாகை மாவட்ட திமுக செயலர் ஏ.கே.எஸ். விஜயன் எம்.பி. தலைமை வகித்தார். நாகை மாவட்ட திமுக மீனவரணி அமைப்பாளர் என். கெüதமன், துணை அமைப்பாளர்கள் ஜி.என். ரவி, எஸ்.டி. தமிழ்ச்செல்வம் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

Leave a Reply