மாநிலங்களவை தேர்தள்: திமுக வேட்பாளர் பட்டியலில் திடீர் திருப்பம்

தமிழகத்தைச் சேர்ந்த 6 மாநிலங்களவை எம்பிகளின் பதவி காலம் ஏப்ரல் 2ஆம் தேதி முடிவடைகிறது என்பது தெரிந்ததே. இதனை அடுத்து மார்ச் 26 ஆம் தேதி நடைபெற இருக்கும் மாநிலங்களவை தேர்தலில் அதிமுகவுக்கு மூன்று இடங்களும் திமுகவுக்கு மூன்று இடங்களும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது

இந்த நிலையில் திமுக தனது கட்சியின் மூன்று வேட்பாளர்கள் பெயரை அறிவித்துள்ளது. திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ் மற்றும் என்.ஆர். இளங்கோ ஆகிய மூவர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்

இவர்களில் ஏற்கனவே திருச்சி சிவா மற்றும் என்.ஆர். இளங்கோ ஆகியோர் ஏற்கனவே மாநிலங்களவை உறுப்பினர்களாக உள்ளனர் என்பதும் தற்போது அந்தியூர் செல்வராஜ் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

மூத்த திமுக உறுப்பினரான அந்தியூர் செல்வராஜ் ஏற்கனவே அந்தியூர் தொகுதியில் எம்.எல்.ஏஆகவும், அமைச்சராகவும் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் திமுக இளைஞரணிக்கு ஒரு எம்பி பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்பட்ட நிலையில் தற்போது இளைஞர் அணியில் இருந்து யாரும் எம்பி வேட்பாளராக தேர்வு செய்யப்படுவதால் இளைஞரணி தலைவர் உதயநிதி அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது

Leave a Reply