உள்ளாட்சி தேர்தல்: திமுக தாக்கல் செய்த மனு என்ன ஆயிற்று?

உள்ளாட்சி தேர்தல்: திமுக தாக்கல் செய்த மனு என்ன ஆயிற்று?

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரும் வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், இந்தத் தேர்தலுக்கு எதிராக திமுக மனுதாக்கல் செய்துள்ளது. இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நாளை மறுநாள் விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டங்களில் வார்டூகள் மறுவரையறை செய்த பின்னரே உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் 9 மாவட்டங்கள் தவிர மீதி மாவட்டங்களை தேர்தல் நடத்தலாம் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது

இந்த உத்தரவை அடுத்து உள்ளாட்சித் தேர்தலுக்கான புதிய அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இந்த நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவுபடி இட ஒதுக்கீட்டை முழுமை செய்யாமல், வார்டு மறுவரை செய்யாமல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதாக திமுக குற்றச்சாட்டு கூறி இன்று மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளது

இந்த மனு மீதான விசாரணை நாளை உச்ச நீதிமன்றத்தில் வரவுள்ள நிலையில் அன்றைய தேதியில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுமா? நடைபெறாதா? என்பது குறித்து தெரியவரும்

Leave a Reply