மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் திமுக எம்பிக்கள் திடீர் சந்திப்பு.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் திமுக எம்பிக்கள் திடீர் சந்திப்பு.


விவசாய வாகனப் பிரிவில் இருந்து டிராக்டர் நீக்கப்படும் என மத்திய அரசு அறிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் இதுகுறித்த கோரிக்கை மனு ஒன்றுடன் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அவர்களை இன்று திமுக எம்பிக்கள் சந்தித்தனர்.

டெல்லியில் நடந்த இந்த சந்திப்பின்போது திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் எழுதிய கடிதத்தை திமுக எம்.பி. திருச்சி சிவா அமைச்சரிடம் ஒப்படைத்தார்.

அப்போது, விவசாய வாகனப் பிரிவில் இருந்து டிராக்டர் நீக்கப்படாது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதிபட திமுக எம்பிக்களிடம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply