நேற்றைய சட்டசபை கூட்டத்தொடரில் ஆளுனர் உரையை கிழித்ததால் குன்னம் தொகுதி திமுக எம்.எல்.ஏ, எஸ்.எஸ்.சிவசங்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக சபாநாயகர் பி. தனபால் அறிவித்தார்.
நேற்று சட்டசபையில் ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் விவாதம் நடந்தது. விவாதத்தின் இடையே சிவசங்கர் எம்.எல்.ஏ சபாநாயகரை நோக்கி ஆவேசமாக சில கருத்துக்களை கூறியதாகவும், அதன் பின்னர் ஆளுனர் உரையை சபாநாயகர் முன்னிலையில் கிழித்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து தனியாக ஒரு தீர்மானத்தை அவை முன்னார் ஓ.பன்னீர்செலவம் முன்மொழிந்தார். சட்டப்பேரவையில் கண்ணியத்தை குறைக்கும் வகையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட எம்.எல்.ஏ மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சபாநாயகரை கேட்டுக்கொண்டார்.

இந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு, ஒருமனதாக நிறைவேறியாதால், இந்த கூட்டத்தொடர் முழுவதும் சிவசங்கர் எம்.எல்.ஏ சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார்.

Leave a Reply