திமுக 3ஆம் கட்ட தேர்தல் அறிவிப்பு

திமுகவில் ஒன்றிய பொறுப்புகளுக்கு மூன்றாம் கட்ட தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மாவட்ட திமுக அலுவலகங்களில் ஜூன் 24 ஆம் தேதிக்குள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

3வது கட்டமாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தி.மலை, கடலூர், நாகை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

போட்டியிருந்தால் ஜூன் 25-27 ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்தப்படும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.