ஸ்டாலினை பயமுறுத்தி விடலாம் என நினைப்பது அப்பாவித்தனம்: துரைமுருகன்

திமுக தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் இன்று காலை வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர் இது குறித்து பேட்டியளித்த துரைமுருகன் கூறியதாவது

அடக்குமுறைக்கு திமுக ஒருபோதும் அஞ்சியது கிடையாது. மகள் செந்தாமரை வருத்தப்பட்டால் ஸ்டாலின் மனம் தாங்கமாட்டார் என நினைக்கிறார்கள்.

திமுகவினர் வீடுகளில் சோதனை நடத்துவது பயமுறுத்துவதற்கு ஸ்டாலினை பயமுறுத்தி விடலாம் என நினைப்பது அப்பாவித்தனம். மத்திய அரசின் இந்த போக்கு ஜனநாயகம் அல்ல

வருமான வரி சோதனை நடத்தும் மத்திய அரசின் செயலை வன்மையாக கண்டிக்கிறேன் மிசா காலத்திலும் வருமான வரித்துறை சோதனை நடந்தது. எந்த சலனமும் இன்றி பணியாற்றினார், கருணாநிதி. தந்தை கருணாநிதியை விட இரும்பு நெஞ்சம் கொண்டவர் ஸ்டாலின் என துரைமுருகன் பேட்டி அளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.