உள்ளாட்சி தேர்தல் முடிவு: திமுக முன்னிலை

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது என்பது தெரிந்ததே

இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை பணி நடைபெற்று வரும் நிலையில் தற்போது முன்னிலை நிலவரங்கள் தெரிய வந்துள்ளன.

திமுக 12 மாவட்ட கவுன்சிலர் மற்றும் 13 ஒன்றிய கவுன்சிலர் என முன்னிலை பெற்றுள்ளது. அதிமுக ஒரே ஒரு மாவட்ட கவுன்சிலர் என முன்னிலை பெற்றுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மூன்று மாவட்ட கவுன்சிலர் திமுகவை சேர்ந்தவர்கள் முன்னிலையில் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

பெரும்பாலான மாவட்ட கவுன்சிலர்கள் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்களாக திமுகவினர் முன்னிலை வகித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது