’வீரத்தின் விலைநிலமே’: திமுக போஸ்டரால் பரபரப்பு

திமுக தலைவர் முக ஸ்டாலின் அவ்வப்போது சில கருத்துக்களை மாற்றி பேசும்போது ஊடகங்கள் மற்றும் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருவது தெரிந்ததே. குறிப்பாக ‘பூனை மேல் மதில் போல்’ என்பதும் டிரெண்ட் ஆனது.

இந்த நிலையில் திமுக தலைவரை போல் திமுகதொண்டர்களும், அவ்வப்போது தாங்கள் அடித்து வரும் போஸ்டர்களில் பொருள் மாறும் வகையில் சில வார்த்தைகளை பதிவு செய்து கிண்டலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

சமீபத்தில் நடந்த திமுக விழா ஒன்றுக்காக பேனர் வைத்த திமுக தொண்டர்கள், ‘வீரத்தின் விளை நிலமே’ என்பதற்கு பதிலாக ‘வீரத்தின் விலை நிலமே’ என்று குறிப்பிட்டிருப்பது பெரும் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது. நெட்டிசன்கள் இந்த போஸ்டரை வச்சு செய்து வருகின்றனர். தமிழின தலைவர் என்று போற்றப்பட்ட கலைஞரின் தொண்டர்கள் இவ்வாறு செய்யலாமா? என்பதுதான் அனைவரின் வருத்தமாக உள்ளது

Leave a Reply