shadow

வதந்திகளை பரப்பி சந்தோசம் அடைகிறார்கள்: ஸ்டாலினை சந்தித்த பின் திருமாவளவன் பேட்டி

திமுக கூட்டணியில் விசிக, மதிமுக இல்லை என திமுக பொருளாளர் துரைமுருகன் கூறிய கருத்து தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் சற்றுமுன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சந்தித்தார்.

இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், ‘திமுக – விசிக உறவில் எந்த பிரச்சனையும் இல்லை. திமுக தலைவர் ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். திமுகவுடன் உறவு வலிமையாக உள்ளது. சிலர் வதந்திகளை பரப்பி சந்தோசம் அடைய பார்க்கிறார்கள்’ என்று கூறினார்.

திருமாவளவன் இவ்வாறு கூறினாலும் கூட்டணியில் உள்ள கட்சிகள் குறித்து தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மெளனம் காத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply