shadow

விஜயகாந்துக்கு எதிராக கூட்டணி சேர்ந்த அதிமுக-திமுக

Jayalalithaa-Karunanidhiதேமுதிக கட்சி திமுக கூட்டணியில் கண்டிப்பாக இணையும் என திமுக தரப்பு கடைசி வரை காத்திருந்ததாகவும், ஆனால் தங்கள் நம்பிக்கையை வீழ்த்திய தேமுதிக கட்சியை இல்லாமல் செய்துவிட வேண்டும் என்பதுதான் தற்போது திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்களுக்கு தலைமை கொடுத்துள்ள உத்தரவாம். மக்கள் நலக்கூட்டணியுடன் சேர்ந்ததால் ஒரு பக்கம் உள்ளூர மகிழ்ச்சியில் இருக்கும் அதிமுகவும், தேமுதிகவை வளரவிட்டால் பிற்காலத்தில் ஆபத்து என்பதை புரிந்து கொண்டு இந்த தேர்தலோடு அந்த கட்சியை ஒழித்து கட்டும் நோக்கில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தேமுதிகவை வீழ்த்துவதில் அதிமுகவும் திமுகவும் ஒன்றையொன்று அறியாமலேயே கூட்டணி சேர்ந்துவிட்டதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். முதல்கட்டமாக தேமுதிகவின் எம்.எல்.ஏக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் யார் யாரெல்ல்லாம் அதிருப்தியில் இருக்கின்றனர் என்ற லிஸ்ட் தயாராகி வருகிறதாம். இப்போதைக்கு மூன்று எம்.எல்.ஏக்களும், ஆறு மாவட்ட செயலாளர்களும் கட்சி தாவ சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் இந்த எண்ணிக்கை தேர்தல் நெருங்கும்போது அதிகருக்கும் என்றும் கூறப்படுகிறது.

திமுகவுடன் கூட்டணி சேரும் என்றுதான் பெரும்பாலான தேமுதிகவினர் நம்பிக்கையுடன் சீட் கேட்டு லட்சக்கணக்கில் பணம் கட்டியுள்ளனர். ஆனால் மக்கள் மத்தியில் 5% வாக்குகள் கூட இல்லாத மக்கள் நலக்கூட்டணியுடன் தேமுதிக கூட்டணி அமைத்தது கட்சியின் வீழ்ச்சிக்கு கேப்டனே வழிவகுத்துவிட்டார் என்று பலர் வெளிப்படையாகவே பேசி வருகின்றனர். இவர்களில் பலர் கட்சி தாவ தயாராக இருப்பதாகவே கூறப்படுகிறது. இந்த செய்திகள் எந்த அளவுக்கு உண்மை என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Leave a Reply