shadow

திமுக-காங்கிரஸ் கூட்டணியை ஒதுக்கி தள்ளிய தேமுதிக. தமிழக அரசியலில் பரபரப்பு

premalathaதமிழக அரசியலில் தற்போது கூட்டணி அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி இறுதியானது. இந்த கூட்டணியில் தேமுதிக இணையுமா? என்று எதிர்பார்த்த நிலையில், திமுகவையும், காங்கிரஸையும் ஊழலில் ஊறிய கட்சி என தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி விமர்சனம் செய்துள்ளதால் திமுக கூட்டணியில் தேமுதிக இணைய வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது.

திமுக, காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ளதால், அதிமுகவுடனே கூட்டணி வைக்க பாஜக விரும்புவதாகவும், இதுகுறித்து அதிமுக மற்றும் பாஜக மேலிடத்தலலவர்கள் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

எனவே தற்போதிய நிலவரப்படி தேமுதிக, மக்கள் நலக்கூட்டணியுடன் இணையவே வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது. தேமுதிக தலைமையில் அமையும் கூட்டணியில் மக்கள் நலக்கூட்டணி இணையும் என்றும், விஜயகாந்த் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்றும் தமிழக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

திமுக-காங்கிரஸ் மட்டும் போட்டியிட்டால் அது பலவீனமான கூட்டணியாகத்தான் அமையும் என்றும், மக்கள் நலக்கூட்டணியில் இணையும் தேமுதிகவின் முடிவு தற்கொலைக்கு சமம் என்றும் கூறும் அரசியல் விமர்சகர்கள் மீண்டும் அதிமுக எளிதாக வெற்றி பெறவே அதிக வாய்ப்புள்ளது என்றும் கூறிவருகின்றனர்.

Leave a Reply