shadow

6பாரதிய ஜனதா கூட்டணியில் பிரதான கட்சியாக விளங்கும் தேமுதிக கட்சி இன்று தனது இரண்டாவது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. நேற்று செய்தியாளர்களின் முன்னிலையில் அக்கட்சியில் தலைவர் விஜயகாந்த் இந்த பட்டியலை வெளியிட்டார்.

விஜயகாந்த் வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் விபரம் வருமாறு:

மத்திய சென்னை- ரவீந்திரன்

விழுப்புரம்(தனி)- உமாசங்கர்

கள்ளக்குறிச்சியில்- ஈஸ்வரன்

சேலம்- எல்.கே.சுதீஷ்

நாமக்கல்-எஸ்.கே.வேல்

கரூர்-என்.எஸ்.கிருஷ்ணன்

கடலூர்-ஆர்.ராமானுசம்

திருப்பூரில் தினேஷ்குமார்

திண்டுக்கல்-கிருஷ்ணமூர்த்தி

திருநெல்வேலி-சிவனணைந்த பெருமாள்

முன்னதாக வெளியிடப்பட்ட முதல்கட்ட பட்டியலில் திருவள்ளூர் தொகுதியில் யுவராஜும், வடசென்னையில் சவுந்திரபாண்டியனும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. திருச்சியில் விஜயகுமாரும், மதுரையில் சிவ முத்துக்குமாரும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.

இதுதவிர நாமக்கல் வேட்பாளராக முன்னதாக அறிவிக்கப்பட்ட மகேஷ்வரன், உடல்நல பாதிப்பு காரணமாக தேர்தலில் போட்டியிட விரும்பாததால், தற்போது புதிய வேட்பாளர் களமிறக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply