shadow

தேமுதிக எம்.எல்.ஏ. பார்த்தசாரதியின் ஜாமின் மனு தள்ளுபடி
dmdk mla
தேமுதிக தலைவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை தள்ளுபடி செய்த நிலையில் தேமுதிக எம்.எல்.ஏ பார்த்தசாரதி தாக்கல் செய்த ஜாமின் மனுவை சென்னை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தேமுதிக தலைவர் பத்திரிகையாளர்களை அவமதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 31ம் தேதி, தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வீட்டின் அருகே பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது தேமுதிக எம்.எல்.ஏ. பார்த்தசாரதி உள்பட அக்கட்சியின் தொண்டர்கள் பத்திரிகையாளர்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து பதிவு செய்யப்பட்ட புகாரின் அடிப்படையில் எம்.எல்.ஏ பார்த்தசாரதி உட்பட 19 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவர்கள் ஜாமின் கோரி, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு தலைமை மாஜிஸ்திரேட் கணேசன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கு மீதான விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக கூறிய தலைமை மாஜிஸ்திரேட், மேலும் பலரை கைது செய்ய வேண்டியிருப்பதால் 19 பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், விளம்பரத்திற்காக இது போன்ற மனுக்களை தாக்கல் செய்யக் கூடாது என கூறி மனுவை தள்ளுபடி செயதனர்.

Leave a Reply