சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் செர்பிய வீரரும், நடப்பு சாம்பியனுமான நோவக் ஜோகோவிச்  சாம்பியன் பட்டம் வென்றார்.

ஒற்றையர் இறுதிச்சுற்று ஆட்டத்தில், அர்ஜென்டினாவின் டெல் போட்ரோவுடன் விளையாடிய ஜோகோவிச், முதல் செட்டை 6-1 என எளிதாக கைப்பற்றினார். இதற்கு பதிலடி கொடுத்த டெல் போட்ரோ, 2-வது செட்டை 6-3 என வசப்படுத்தினார்.

டை-பிரேக்கர்:
இதனால் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் 3-வது செட் ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது.  டை-பிரேக்கர் வரை நீடித்த அந்த செட்டை, நோவக் ஜோகோவிச் 7-6 என கைப்பற்றி  சாம்பியன் பட்டம் வென்றார்.

Leave a Reply