shadow

நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி அன்று விடுமுறை என்ற நிலையில் நவம்பர் 5 ஆம் தேதி தீபாவளிக்கு மறுநாளும் அரசு விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது

இந்த ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி வியாழக்கிழமை வருவதால் வெள்ளிக்கிழமை கூடுதலாக விடுமுறை அளித்தால் 4 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும் என்ற கோரிக்கை அரசு ஊழியர்கள் மத்தியில் எழுந்தது.

இந்த நிலையில் தமிழக அரசு சற்று முன் தீபாவளிக்கு மறுநாள் அதாவது நவம்பர் 5ம் தேதியும் விடுமுறை என அறிவித்துள்ளது. இதனை அடுத்து நவம்பர் 4 முதல் 7 ஆம் தேதி வரை நான்கு நாட்கள் தொடர் விடுமுறை தீபாவளிக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது