தீபாவளிக்கு மேலும் ஒரு விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு!

நவம்பர் நான்காம் தேதி தீபாவளி அன்று விடுமுறை என்ற நிலையில் நவம்பர் 5 ஆம் தேதி தீபாவளிக்கு மறுநாளும் அரசு விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது

இந்த ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி வியாழக்கிழமை வருகிறது என்பதும் இதனை அடுத்து வெள்ளிக்கிழமை ஒரு நாள் கூடுதலாக விடுமுறை அளித்தால் 4 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தமிழக அரசு சற்று முன் தீபாவளிக்கு மறுநாள் அதாவது நவம்பர் 5ம் தேதியும் விடுமுறை என அறிவித்துள்ளது. இதனை அடுத்து நவம்பர் 4 முதல் 7 ஆம் தேதி வரை நான்கு நாட்கள் தொடர் விடுமுறை தீபாவளிக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இதனையடுத்து தென் மாவட்டங்கள் உள்பட வெளியூர்களிலிருந்து வரும் அரசு ஊழியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அரசு ஊழியர்களுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை என்றாலும் நவம்பர் 5ஆம் தேதி பெரும்பாலான தனியார் அலுவலகங்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது