குஜராத் கலவரத்தில் நரேந்திர மோடிக்கு தொடர்பில்லை என்று சிறப்பு புலனாய்வு குழு தாக்கல் செய்த அறிக்கையை எதிர்த்து பலியான காங்கிரஸ் எம்.பி. ஈசானின் மனைவி ஜாகியா ஆமதாபாத் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

கோர்ட்டு உத்தரவு வந்தபின்னர் நரேந்திரமோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். ‘சத்யமேவ ஜெயதே (வாய்மையே வெல்லும்), உண்மைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி’ என்று அவர் கூறியுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியும் இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளது. பாரதிய ஜனதா கட்சி தலைவர் ராஜ்நாத் சிங் கூறும்போது, ‘‘இந்த தீர்ப்பு நாங்கள் எதிர்பார்த்தது தான். நரேந்திர மோடிக்கு எதிராக அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக நாங்கள் கூறிவந்தது இதன் மூலம் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

Leave a Reply