சென்னை போன்ற பெருநகரங்களில் கணவன், மனைவி என இரண்டு பேர்களும் வேலைக்கு போவதால் வீட்டில் எளிதான முறையில் சமையல் செய்ய உதவுவதுதான் இட்லி, தோசை மாவு. ஆனால் இந்த மாவை தயாரிக்கும் முறைகளில் பலவித சுகாதராக நடைமுறை பயன்படுத்தப்படாததாலும், ஆப்ப சோடா ,ஈஸ்ட், ப்ளீச்சிங் பவுடர் போன்ற கலப்பட பொருட்கள் கலப்பதாலும், இதை உபயோகிப்பவர்கள் பலவித நோய்களுக்கு ஆளாக வேண்டிய துர்ப்பாகிய நிலை வருவதாக தற்போது அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன.

மாவு தயாரிக்கும் தொழில் தற்போது குடிசைத்தொழில் போல பெருகிவிட்டது. விலையிலா அரிசி, அல்லது காலாவதியான அரிசியை வாங்கி, அதில் தரம் குறைந்த உளுந்து அல்லது ரேஷன் கடைகளில் வாங்கும் உளுந்து ஆகியவற்றோடு வெண்மை நிறத்திற்காக ப்ளீச்சிங் பவுடர் கலந்து சுகாதாரமற்ற தண்ணீரை கலந்து மாவு தயாரிப்பதாக அதிர்ச்சி உண்மை தெரியவந்துள்ளது. இந்த வகையான மாவில் தயாரிக்கப்படும் இட்லி, தோசை முதலியவற்றை உண்பதால் பலவித நோய்கள் ஏற்படுவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

தரம் குறைந்த மாவுகளை குடிசைப்பகுதிகள்ல் தயாரித்து தினமும் ரூ.500 முதல் ரூ.1000 வரை பெண்கள் சிலர் சம்பாதித்து வருவதாகவும், இந்த விற்பனையை ஒழுங்குபடுத்த வேண்டும், மாநகராட்சி அலுவலர்கள் இந்த விஷயத்தில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை வலுத்து வருகிறது.

Leave a Reply