shadow

நயன்தாரா காதலருக்கு கிடைத்த ஆஸ்கார் விருது

நேற்று உலகம் முழுவதும் ஆஸ்கார் விருதுகளை பெறும் நட்சத்திரங்கள் யார் என்ற எதிர்பார்ப்பில் இருந்த நிலையில் பிரபல தமிழ் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளதாக பெருமையாக தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.

நேற்று சென்னையில் உள்ள தனியார் ஸ்டுடியோ ஒன்றில் இயக்குனர் விக்னேஷ் சிவன் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் பணிகளில் இருந்தார். இந்நிலையில் அதே ஸ்டுடியோவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருப்பதை அறிந்து அவரை நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்து கொண்டார்.

இந்த புகைப்படத்தை தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ள விக்னேஷ் சிவன், ”ஆஸ்கார் விருது வழங்கப்பட்ட இந்த நாளில் இறைவன் எனக்கு தந்த ஆஸ்கார் இந்த சந்திப்புதான்’ என்று பதிவு செய்துள்ளார்.

இயக்குனர் விக்னேஷ் சிவன் பிரபல நடிகை நயன்தாராவை காதலித்து வருவதாகவும் விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply