பிரபல இயக்குனர் தாமிரா கொரோனாவுக்கு பலி!

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர் தாமிரா கொரொனாவுக்கு பலியாகியுள்ளது திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது

பாலச்சந்தர் பாரதிராஜா நடித்த ரெட்டைசுழி, சமுத்திரக்கனி நடித்த ஆண்தேவதை உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குனர் தாமிரா

இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இதனை அடுத்து திரையுலகினர் அதிர்ச்சி அடைந்து அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பல திரையுலக பிரபலங்கள் தங்களுடைய டுவிட்டரில் தாமிராவின் மறைவை தங்களால் நம்பவே முடியவில்லை என்று தெரிவித்து வருகின்றனர்

https://twitter.com/KasthuriShankar/status/1386900839499919360

Leave a Reply