இது பெரியார் மண் அல்ல: சுப.வீரபாண்டியனுக்கு அஜித் பட இயக்குனர் பதிலடி

பெரியாரின் கொள்கைகளை பின்பற்றி வரும் சுப.வீரபாண்டியன் தனது டுவிட்டரில், ‘நம்மவர்கள் கோயில் அர்ச்சகர்களாகக் கூட ஆகி விட்டனர். ஆனால் பாஜகவில், ஹெச்.ராஜா, எஸ்வி சேகர் உள்ளிட்ட பார்ப்பனர்கள் எவரும் மாநிலத் தலைவர்களாகக் கூட ஆக முடியவில்லையே, ஏன்? ஏனெனில் இது பெரியார் மண்’ என்று பதிவு செய்திருந்தார்

அஜித், விஜய், உள்பட பல பிரபலங்கள் நடித்த படங்களை இயக்கிய இயக்குனர் பேரரசு சுப.வீரபாண்டியனுக்கு தனது டுவிட்டரில் பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:

இது பெரியார் மண் அல்ல பெருந்தன்மை உள்ளவர்களின் மண்! சுபவீரபாண்டியன் அவர்களே! பெரியாரை உங்கள் சொந்தமாக்கி கொள்ளுங்கள்! தமிழ் மண்ணை பெரியாருக்கு சொந்தமாக்க உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை’ என்று கூறியுள்ளார். சமீபத்தில் இயக்குனர் பேரரசு பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply