கமல் மாதிரி புரியாத டுவீட் போட்ட பா.ரஞ்சித்

பின் விளக்கவுரையும் அளித்ததால் பரபரப்பு

கமல்ஹாசன் பதிவு செய்யும் டுவிட்டுக்களுக்கு யாராவது விளக்கம் அளித்தால் தான் புரியும். அந்த வகையில் அதே பாணியில் இயக்குனர் பா.ரஞ்சித் ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார். அந்த டுவிட்டில் அவர் கூறியதாவது:

அதிகாரத்தின் விளையாட்டை தேவையின் பொருட்டு ஆளுக்கொரு முறையாக விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். ஆட்டக்காரர்களுக்கு தெரிந்தே இருக்கிறது பலி கொடுக்கப்படவேண்டிய ஆடுகளின் குரல்களை. விடுதலையின் சுவை அறியா ஆடுகளுக்கு பசி தீர்க்கும் புற்களே அமிர்தம் !! ஆகா என்ன சுவை

இந்த டுவிட்டுக்கு வேறு சில அர்த்தங்களை புரிந்து கொண்ட நெட்டிசன்களுக்கு பதிலளிக்கும் வகையில் பா.ரஞ்சித்தே இந்த டுவிட்டுக்கு பின் விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்க டுவிட்டில் கூறியிருப்பதாவது:

இக்கருத்தை அண்ணன் திருமாவுக்கு எதிராக திசை திருப்பும் வேலையை விட்டு விட்டு , எல்லா அரசியல் கட்சிகளும் தலித் மக்களை எப்படி அதிகாரத்திற்க்காக கையாளுகிறார்கள் என்கிற உண்மையை உணருங்கள். ஆடுகள்:தலித் மக்கள் புற்கள்: கட்சிகளின் முழக்கங்கள் மீதான நம்பிக்கைகள். என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Leave a Reply