பா.ரஞ்சித்தை அடுத்து இயக்குனர் நவீனை வம்புக்கு இழுத்த திரெளபதி இயக்குனர்

சமீபத்தில் வெளிவந்த திரௌபதி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் இதன் இயக்குனர் ஜி மோகன் அளிக்கும் பேட்டிகளிலும் பதிவு செய்யும் டுவிட்டுகளிலும் சர்ச்சைகள் இருப்பதாக கூறப்படுகிறது

ஏற்கனவே பா ரஞ்சித் அவர்கள் இந்த படத்தை பார்த்து தனது கருத்தை கூற வேண்டும் என ஜி மோகன்,கூறி வந்த நிலையில் தற்போது இன்னொரு இயக்குனரான நவீனை வம்புக்கு இழுக்கும் வகையில் ஒரு டுவிட்டை ஜி மோகன் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:

நவீன் அவர்களே, நீங்கள் திரெளபதி படத்தை பார்த்து நீங்கள் கூறும் வாழ்த்துக்காக காத்திருக்கிறேன். உங்கள் தவறை இப்போது ஒப்புக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன் .. கண்ணீர் விட்டபடி பாராசூட் மூலம் உயரத்தில் பறக்காதீர்கள் .. விபத்து ஏற்படக்கூடும் .. இனிமேல் கவனமாக இருங்கள் சகோதரரே .. என்று ஜி மோகன் குறிப்பிட்டுள்ளார்.

இயக்குனர் ஜி மோகன் நவீனை வம்புக்கு இழுப்பதன் மூலம் திரெளபதி படத்திற்கு மேலும் விளம்பரம் கிடைக்கலாம் என்பது அவரது எண்ணமாக இருக்கலாம் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *