shadow

சென்னை அப்பல்லோவில் இயக்குனர் மணிரத்னம் அனுமதி

சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் பிரபல இயக்குனர் மணிரத்னம் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தளபதி, நாயகன், உள்பட பல வெற்றி படங்களை இயக்கியவர் மணிரத்னம். 62 வயதான மணிரத்னம் தற்போது விஜய்சேதுபதி, சிம்பு நடித்த ‘செக்க சிவந்த வானம்’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் திடீரென இன்று அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது

இதனையடுத்து அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

 

Leave a Reply