சென்னை மாநகராட்சி கூட்டத்தில் அம்மா திரையரங்கம் குறித்த அறிவிப்பு வெளியான உடனே முதல் ஆளாக அந்த திட்டத்திற்கு ஆதரவு கொடுத்துவிட்டார் இயக்குனர் சேரன். முதல்வருக்கு அவர் எழுதிய கடிதத்தில் அம்மா திரையரங்கத்திற்கு ஆதரவு தெரிவித்ததோடு, அந்த திட்டத்தை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தவேண்டும் என்ற கோரிக்கையும் விடுத்தார். அதுமட்டுமல்ல அவருடைய கடிதத்தின் கடைசி வரிகள் “நீங்கள் இடும் கட்டளைகளை செவ்வனே நேர்மையான வழியில் செய்து முடிக்க நான் என்றும் உங்கள் பின்னால் பணிவோடு நீற்க தயார்” என்று எழுதியதைத்தான் கோலிவுட்டில் பரபரப்பாக பேசிவருகிறார்கள்.

சேரன் அதிமுகவில் சேருவதற்கு தயார் ஆகிவிட்டார் என்று கூறப்படுகிறது. ஜேகே என்னும் நண்பனின் வாழ்க்கை’ என்று ஒரு படத்தை எடுத்துவிட்டு அதை ரிலீஸ் செய்யமுடியாமல் கடநத ஆறு மாதங்களாக தத்தளித்து வருகிறார். பெரும் பண நெருக்கடியில் இருக்கும் அவருக்கு தற்போதைய தேர்தல் நேரத்தில் அதிமுகவில் ஐக்கியமானால் படம் ரிலீஸ் ஆகாவிட்டாலும் பண நெருக்கடி தீர்ந்துவிடும் என்பதுதான் சேரனின் திட்டமாம். அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவும் தயாராகவும் இருக்கின்றாராம்.

ஆனால் நடிகர்கள், நடிகைகளை இழுப்பதில்தான் அதிமுக தற்போது ஆர்வம் காட்டி வருகிறது. சேரன் போன்ற இயக்குனர்களை கட்சியில் சேர்ப்பதால் பெரும்பயன் எதுவும் இருக்காது என்கிறதாம் தலைமை.

Leave a Reply