பாலாவின் அடுத்த படத்தில் அரவிந்தசாமி உள்பட 5 ஹீரோக்கள்

பாலாவின் அடுத்த படத்தில் அரவிந்தசாமி உள்பட 5 ஹீரோக்கள்
bala
தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்களே வரிசையில் காத்திருக்கும் நிலையில் பாலாவின் அடுத்த படத்தில் ஐந்து நடிகர்கள் இணைந்து நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

சேது’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் பாலா, நந்தா, நான் கடவுள், அவன் இவன், பிதாமகன், பரதேசி உள்பட பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். சூர்யா, விக்ரம், அதர்வா, விஷால், ஆர்யா ஆகியோர்களின் திரையுலக வாழ்க்கைக்கு திருப்புமுனையாக இருந்தவர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பாலாவின் அடுத்த படத்தில் ஆர்யா, விஷால், அதர்வா, அரவிந்தசாமி, மற்றும் ராணா ஆகிய ஐந்து ஹீரோக்கள் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு நடிகரை வைத்து இயக்குவதே பெரிய விஷயம் என்று இருக்கும் நிலையில் ஐந்து ஹீரோக்கள் நடிக்கும் ஒரு படத்தை பாலாவை தவிர வேறு யாராலும் இயக்குவது என்பது முடியாத காரியம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் பாலா இயக்கிய ‘தாரை தப்பட்டை’ என்ற படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. சசிகுமார், வரலட்சுமி நடித்துள்ள இந்த படம் வரும் பொங்கல் நாளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

English Summary  :Director Bala to direct a Multi-starrer in his next movie

Leave a Reply

Your email address will not be published.