அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் இருந்து திருப்பதிக்கு நேரடி விமான சேவை

அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் இருந்து திருப்பதிக்கு நேரடி விமான சேவை

tirumala-tirupati-balajiதிருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு இந்தியாவில் இருந்து மட்டுமின்றி உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் பெருமளவு வந்து கொண்டிருக்கின்றனர். இவ்வாறு வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் சென்னை அல்லது ஐதராபாத் விமான நிலையம் வந்து பின்னர் அங்கிருந்து வேறு ஒரு விமானம் மூலமோ அல்லது பேருந்து, ரயில் மூலமோ திருப்பதிக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் வெளிநாட்டு பக்தர்களின் வசதிக்காக திருப்பதியில் இருந்து நேரடியாக ஒருசில நாடுகளுக்கு விமான சேவை வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கை கடந்த சில மாதங்களாக இருந்து வருகிறது. இந்த கோரிக்கை தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்டு முதல்கட்டமாக ‘ஏர் இண்டியா’ விமான நிறுவனம் திருப்பதியில் இருந்து அமெரிக்காவின் முக்கிய நகரங்கள் மற்றும் துபாய்க்கு நேரடி சேவையை விரைவில் தொடங்கவுள்ளது.

இச்சேவை அடுத்த மாதம் அதாவது ஜூன் மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று ஏர் இண்டியா அதிகாரி அஜய் ஜெயின் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு விமான சேவை தொடங்குவதை தொடர்ந்து குடியுரிமை மற்றும் சுங்க இலாகா துறைகள் திருப்பதி விமான நிலையத்தில் திறக்கப்பட உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

Leave a Reply