அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவ மற்றும் டிப்ளமோ படிப்புகள்

medical

தமிழகத்திலுள்ள அரசு மற்றும் சுயநிதி மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில், முதுநிலை மருத்துவ, பல் மருத்துவ மற்றும் டிப்ளமோ படிப்புகளில், மாணவர் சேர்க்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மருத்துவ முதுநிலைப் படிப்பு, டிப்ளமோ, M.Ch. படிப்பு மற்றும் முதுநிலை பல் மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய கடைசி நாள் பிப்ரவரி 4. விண்ணப்பக் கட்டணம் ரூ.2000.

விண்ணப்பம் பெறப்படும் கடைசித் தேதி – பிப்ரவரி 5.

நுழைவுத்தேர்வு நடைபெறும் தேதி – மார்ச் 1.

நுழைவுத்தேர்வு முடிவுகள் ஒரு வார காலத்திற்குள் வெளியிடப்படும்.

முதுநிலை மருத்துவ மற்றும் பல் மருத்துவ படிப்புகளின் காலஅளவு – 3 ஆண்டுகள்

டிப்ளமோ படிப்புகளின் காலஅளவு – 2 ஆண்டுகள்

M.Ch. படிப்பின் கால அளவு – 6 ஆண்டுகள்

ஒவ்வொரு படிப்பிற்கும் தனித்தனி தகுதி நிலைகள் உள்ளன.

தேவையான அனைத்து விபரங்களையும் அறிந்துகொள்ள  www.tnhealth.org மற்றும் www.tn.gov.in

Leave a Reply