டிடிவி தினகரனின் அடுத்த அதிரடி: ஜெ. பேரவை செயலாளர் ஆர்.பி.உதயகுமார் நீக்கம்

டிடிவி தினகரனின் அடுத்த அதிரடி: ஜெ. பேரவை செயலாளர் ஆர்.பி.உதயகுமார் நீக்கம்

அதிமுகவின் இரு அணிகளான ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிகள் இணைந்தால் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கிவிடும் என்று அதிமுக தொண்டர்கள் கருதினர். ஆனால் இரு அணிகள் இணைந்தபின்னர் தான் பிரச்சனைகள் அதிகமாகி ஆட்சிக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது.

தினகரன் அணியினர் நேற்று அதிமுக எம்பி வைத்திலிங்கத்தை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கிய நிலையில் இன்று ஜெயலலிதா பேரவை செயலாளர் பொறுப்பிலிருந்து ஆர்.பி.உதயகுமார் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக மாரியப்பன் கென்னடி என்பவர் புதிய செயலாளராக செயல்படுவார் என்று தினகரன் அறிவித்துள்ளார்.

தினகரனின் அறுவை சிகிச்சை தொடங்கிவிட்டது என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நீக்கும் வரை இந்த அறுவை சிகிச்சை தொடரும் என்றும் தினகரன் அணியினர் கூறி வருகின்றனர்.

Leave a Reply