கழுத்து வலியால் கஷ்டப்படுகிறீர்களா?

download (4)

தற்போது பலரும் கழுத்துவலியால் கஷ்டப்படுகிறார்கள். நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதுதான் இதற்குக் காரணம். கழுத்து வலியால் அவதிப்படுபவர்கள், அதிலிருந்து விடுபட ஓர் எளிய பயிற்சி உள்ளது. அது இதுதான்…

நாற்காலியில் நிமிர்ந்த நிலையில் உட்கார்ந்து கொண்டு, பாதங்களை தரையில் பதித்து, உள்ளங்கைகளைத் தொடைகளில் வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் மிக ஆழமாக 10 முறை மூச்சை இழுத்து வெளியே விட வேண்டும்.

தொடர்ந்து இதே நிலையில் மெதுவாக மூச்சு விட்டபடியே இடதுபுறமாக கழுத்தைத் திருப்பி, மூச்சை உள் இழுத்தபடி பழைய நிலைக்கு வந்து, மூச்சை வெளியே விடவேண்டும்.

கழுத்தைத் திருப்பும்போது, இரண்டு விநாடிகள் அப்படியே வைத்திருக்க வேண்டும். இதேபோல், வலதுபுறம், மேல், கீழ் எனக் கழுத்தைத் திருப்பி பயிற்சி செய்ய வேண்டும், கழுத்தை மட்டும் திருப்ப வேண்டும். இந்தப் பயிற்சியை மூன்று முறை செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம் நமது மூளைக்குத் தேவையான ஆக்சிஜன் மற்றும் ரத்தம் சீராகச் செல்வதுடன் செல்களும் புத்துயிர் பெறுகின்றன. இந்தப் பயிற்சியை தொடர்ந்து செய்வதன் வாயிலாக, கழுத்து வலியில் இருந்து நிவாரணம் பெறலாம்.

Leave a Reply

Your email address will not be published.