கடந்த சில நாட்களுக்கு முன்னர் மத்திய அரசு டீசல் விலையை மாதந்தோறும் 50 காசுகள் ஏற்றுவதற்கு அனுமதி அளித்திருந்தது. அதன்படி இன்று நள்ளிரவு  முதல் டீசல் விலை 50 காசுகள் உயர்த்தப்படவுள்ளது.

கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக டீசல் விலையை மாதந்தோறும் 50 காசுகள் உயர்த்தலாம் என மத்திய அரசின் அறிவிப்பின்படி இன்று நள்ளிரவு முதல் சென்னையில் டீசல் விலை உயர்த்தப்பட உள்ளது. இதுவரை ரூ.57.95 காசுகள் என்று இருந்த டீசலின் விலை இனி ரூ. 58.56 என உயர்த்தப்பட உள்ளது. உள்ளூர் வரிகளும் இதில் அடங்கும்.

டெல்லியில் ரூ.53.34 ல் இருந்து ரூ.54.91 என மாற்றம் செய்யப்படுவதாகௌம், கொல்கத்தாவில் ரூ.58.91ல் இருந்து ரூ.59.50 ஆகவும், மும்பையில் ரூ.62.60ல் இருந்து ரூ.63.23 ஆகவும் விலைமாற்றம் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மானியம் இல்லாத சிலிண்டரின் விலை சென்னையில் இன்று முதல் ரூ.102 குறைக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply